
உ
சிவமயம்
சைவ சித்தாந்த மன்றம், கனடா
திருச்சிற்றபலம்
புலம்பெயர் கனடா நாட்டில் சைவத் தமிழ் மக்களிடையே, சைவ சமய திருநெறிய தமிழ் திருமுறை வழிபாடு, சைவசமய அறிவு, சைவ ஆசார கலாச்சார ஒழுக்க நெறிகள் போன்ற சைவ விழுமியங்க ள் , சைவசமய கலாச்சார விழாக்கள் என்பன தழைத்தோங்கத் தொண்டாற்றும் நோக்கத்துடன் கனடா சைவ சித்தாந்த மன்றம் தோற்றுவிக்கப்பட்டது.
சேக்கிழார் சுவாமிகள் தாம் திருத்தொண்டர் புராணத்தை எழுதியதன் நோக்கத்தைப் பின்வரும் பாடலில் விளக்குகிறார்.
மதிவளர் சடைமுடி மன்றுளாரை முன்
துதிசெயும் நாயன்மார் தூய சொல் மலர்ப்
பொதிநலன் நுகர்தரு புனிதர் பேரவை
விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே.
அவரது கூற்றுக்கிணங்க நாயன்மார்களின் தூயசொல் மலர்ப் பொதிநலன் நுகர்தரு புனிதர் பேரவைகள் உலகினில் விளங்கி வெல்கிட கனடா சைவ சித்தாந்த மன்றம், “சைவசமய குரவர் பாடசாலை”, “அன்புநெறி” என்ற சஞ்சிகை என்பன தோற்றுவிக்கப் பெற்றன.
திருச்சிற்றபலம்